தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அஜய் தேவ்கான், சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். இவர் விரைவில், சிவாய் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் அஜய். இதனிடையே இப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனை அணுகியுள்ளார் அஜய் தேவ்கான். இப்படத்தில் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அவரை நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார் அஜய். சிவாய் படத்தில், அஜய் தேவ்கான் உடன் மாஜி பாலிவுட் ஹீரோயின் சாயிரா பானுவின் பேத்தி சாயிஷாவும் நடிக்க இருக்கிறார்.