Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துப்பாட்டு கேட்கும் ஓவியா!

01 ஜன, 2015 - 11:24 IST
எழுத்தின் அளவு:

தமிழில் சீனி, சண்டமாருதம் படங்களில் நடித்து வரும் ஓவியா, இந்தியில் ஷக்யு சர்பிரா, ஜட் த ஸ்டோரி ஆப் ரிவென்ஞ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை தனக்கென ஒரு கமர்சியல் வட்டத்தை உருவாக்காத நிலையில், இந்தி சினிமாவில் தனக்கு சான்ஸ் கிடைத்திருப்பதால் அதிக உற்சாகத்தில் உள்ளார்.


இதுபற்றி ஓவியா கூறுகையில், இந்தியில் இரண்டு படங்களிலுமே நடித்து விட்டேன். அதோடு, எனது பர்பாமென்ஸ் மட்டுமின்றி பாடிலாங்குவேஜையும் மாற்றியிருக்கிறேன். அதனால் அந்த படங்களில் என்னைப்பார்க்கும் தென்னிந்திய ரசிகர்கள் இன்ப அதிர்சசியடைவார்கள். அந்த அளவுக்கு புதுமையான கெட்டப்பில் நடித்துள்ளேன்.


மேலும், நான் மலையாளப் படங்களில் நடிப்பதற்கு முன்பிருந்தே மேடையில் நடனமாடுவேன். அதோடு வெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளில் ஆடி கைதட்டல் பெற்றிருக்கிறேன். இருப்பினும், சினிமாவில் எனது நடனத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு சரியான மூவ்மெண்டுகள் கொண்ட பாடல்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.


அதேசமயம். இந்தியில் என்னை வித்தியாசப்படுத்தும் கேரக்டர் மட்டுமின்றி நடனமாடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதனால் அதிக ஈடுபாடு காட்டி அந்த படங்களில் நடித்தேன். அதேபோல் இப்போது நான் தமிழில் சரத்குமாருடன் நடித்துள்ள சண்டமாருதம் படத்திலும் அதிரடியான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அது கிட்டத்தட்ட அயிட்டம் நடிகைகள் ஆடுவதுபோல் இருக்கும். இன்றைய ரசிகர்களின் ரசனை மனதில் கொண்டு இப்படி மாறியிருக்கிறேன் என்று கூறும் ஓவியா, முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆடுவதற்கு தயாராக உள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in