Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

டிஜிட்டல் காலத்தில், பிலிமுக்கு மாறியது ஏன்...? - ஐ ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேட்டி!!

01 ஜன, 2015 - 02:41 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க ஔிப்பதிவாளர்களில் பி.சி.ஸ்ரீராமும் ஒருவர். தனது ஓவிய ஔிப்பதிவால் அந்த படத்திற்கு பலம் சேர்ப்பவர். இப்போது ஐ எனும் பிரமாண்ட படத்திற்கு தனது ஓவிய ஔிப்பதிவால் இப்படத்தை இன்னும் பிரமாண்டமாக்கியுள்ளார். ஐ பட அனுபவம் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ...




* ஷங்கரோடு ஐ படம் அனுபவம்...?


ஷங்கர் மாதிரி இயக்குநரோடு வேலை பார்க்கும் போது நம்மை நாமே கண்டுபிடிச்சிக்கலாம், நம்மிடம் இருக்கும் திறமைகளை, முயற்சிகளை, புதிய வெளிப்பாடுகளை கொண்டு வர முடியும்.


* ஒளிப்பதிவில் என்ன ஸ்பெஷல்..?


இந்தப்படத்தை முழுக்க முழுக்க பிலிம்ல எடுத்திருக்கோம்.


* நீங்க தான் வானம் வசப்படும் படத்தில டிஜிட்டல் முறையை கொண்டு வந்தீங்க, திரும்ப நீங்க பிலிமுக்கு போக காரணம்..?


பிலிம் கடைசி காலத்துக்கு வந்தாச்சு. இனி உலகம் முழுவதும் டிஜிட்டல் மயம் தான். விக்ரமுடைய கெட்டப், படத்தின் தேவைகள் எல்லாத்துக்கும் பிலிம் தான் சரியா இருக்கும்னு நினைச்சேன். அதனால் இதில் படம் பண்ணோம். ஐ பட தேவைக்கு பிலிம் தான் வசதி.


* விக்ரம் பற்றி...?


அவர்கிட்ட இருக்கும் ஈடுபாடு, ஆர்வம், ஏதேனும் புதிதாக செய்யணும் என்ற வேகம் தான் அவர்கிட்ட எனக்கு பிடித்தது. தன்னை வறுத்திக் கொண்டு நடிப்பவர், பிரமிக்க வைத்த நடிகர். ஐ படத்தை பொறுத்தவரை விக்ரம் மேக்கப் ரொம்ப சவாலானது. எனக்கே சில இடங்களில் பயம் வந்தது. விக்ரமை தவிர்த்து வேறு யாராலும் இதை பண்ணியிருக்க முடியாது என்பது என் கருத்து.


* விக்ரமை வைத்து மீரா படத்தை இயக்கும் போதும், இப்போது ஐ படத்தில் ஒளிப்பதிவு செய்யும் போது என்ன வித்தியாசத்தை உணர முடிகிறது.?


விக்ரமிற்கு ஆரோக்கியமான ஆர்வ கோளாறு. வருடங்கள் தான் போனதே தவிர அப்போது இருந்த அதே விக்ரம் தான் இப்போதும் என் கேமிரா மூலம் பார்க்கிறேன். ஆர்வமும், உறுதியும் கூடியிருக்கே தவிர குறையவில்லை. இதுதான் அவருடைய பலம் என்று நினைக்கிறேன்.


* ஐ படத்தில் நீங்கள் ஆச்சர்யப்படும் விஷயங்கள் என்னென்ன இருக்கு.?


படம் முடித்ததே எனக்கு பிரமிப்பாக தான் இருக்கு. ஏனா, நான் இதுவரை குறைந்த பட்ஜெட்டில் தான் படம் ஒளிப்பதிவு வேலை செய்திருக்கேன். ஐ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் நான் ஒளிப்பதிவு செய்த படம். இதுவே எனக்கு முதல் ஆச்சர்யம். படம்பார்க்கும் போது தான் அத்தனை பேரின் உழைப்பு தெரியும். புதிய புதிய முயற்சி எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது.


* நீங்க எவ்வளவு நாள் இந்த படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய எடுத்து கொண்டீர்கள்.?


கிட்டத்தட்ட 3 வருஷம்னு சொல்லலாம். வேற எந்த கமிட்மெண்ட்டும் வைத்துக் கொள்ளாமல், ஐ படம் மட்டுமே என்னுள் இருந்தது. இப்போது முடித்து கொடுத்த திருப்தி. ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு பேசப்போகும் வார்த்தைக்காக காத்திருக்கிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in