ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்ற மூத்த ஹாலிவுட் நட்சத்திரம் லூயிஸ் ரெய்னர் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 104. ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த லூயிஸ், தமது வாழ்வின் பெரும்பகுதியை லண்டனிலேயே கழித்தார். கிரேட் ஜிக்பீல்ட் (GREAT ZIGFIELD) என்ற படத்தின் நாயகியாக 1936ஆம் ஆண்டிலும், குட் எர்த்(GOOD EARTH) என்ற படத்தின் நாயகியாக 1937ஆம் ஆண்டிலும் நடித்து தொடர்ச்சியாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை லூயிஸ் ரெய்னர் பெற்றார். ஹாலிவுட்டின் எம்.ஜி.எம் படத் தயாரிப்பு நிறுவனத்தினர் இவரை அடையாளம் காணும்வரை அவர் ஜெர்மானிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஹாலிவுட்டுக்கு வந்த பின்னர் 1984 ஆம் ஆண்டு தி லவ் போட் (The Loveboat) என்ற அமெரிக்கச் சின்னத்திரைத் தொடரில் நடித்த லூயிஸ், 1998ஆம் ஆண்டு பிரபலங்களாக இருந்த மைக்கேல் கேம்போன், டாமினிக் வெஸ்ட் ஆகியோருடன் தி கேம்ப்ளர் (The Gambler) என்ற படத்திலும் நடித்திருந்தார்.