ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைனே பியார் கியா படத்தின் போது, நடிகர் சல்மான் கானிற்கு சரியாக நடனம் ஆட வராது என்று அப்படத்தின் இயக்குநர் சூரஜ் பர்ஜாய்தா கூறியுள்ளார். மைனே பியார் கியா படம் வெளிவந்து, 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. சல்மான் கான் மற்றும் பாக்யஸ்ரீ நடிப்பில் வெளியான மைனே பியார் கியா படம், வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் மூலம், சூரஜ் பர்ஜாய்தா, இயக்குநராக அறிமுகமானார். படம் வெளியாகி, 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதுகுறித்த நினைவுகளை, இயக்குநர் சூரஜ் பர்ஜாய்தா பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மைனே பியார் கியா படத்தில் நடிப்பதற்காக, ஹீரோவை தேடிக்கொண்டிருந்தோம். அப்போது, ஷபானா தத் தான், சல்மான் கான் பெயரை பரிந்துரைத்தார். என் ஆபிஸ் ரிசப்ஷனில், சல்மான் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் மிகவும் ஒல்லியாக இருந்தார். போட்டோவில் அவரை பார்க்கும்போது நன்றாக இருந்ததன் காரணத்தால், படத்தில் சல்மானை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. படமும் வெற்றிப்படமாக அமைந்தது என்று சூரஜ் கூறினார்.