தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிறிஸ்துமஸ்க்கு மீகாமன், கப்பல், கயல், வெள்ளக்கார துரை என 4 படங்கள் வெளியாகின. ஆனால், ஒவ்வொரு படத்தைப்பற்றியும் ஒவ்வொருவிதமான கமெண்டுகள் வந்தவண்ணம் உள்ளன. ஒரு படம் சிட்டியில் ஓ.கே, இன்னொரு படம் பி அண்ட் சியில் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது என்று கோலிவுட்டில் டாக் இருக்கிறது.
இந்தநிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், ஆர்யாவின் மீகாமன் படம் வெளியான 3வது நாளிலேயே சக்சஸ் பிரஸ் மீட் வைத்து அதிர்ச்சி கொடுத்தனர். அதையடுதது, 5வதுநாளில் கப்பல் படக்குழுவினர் நாங்கள்தான் இந்த ரேஸில் நம்பர் ஒன் என்றனர். மற்றபடி, கயல், வெள்ளக்காரதுரை படக்குழுவினர் இதுவரை எந்த மீட்டிங்கும் நடத்தவில்லை. இந்த நிலையில் இரண்டாவதாக சக்சஸ் பிரஸ்மீட் நடத்திய கப்பல் பட டைரக்டர் கார்த்திக் ஜி.கிரிஷிடம், மீகாமன் படமும் சகசஸ் என்கிறார்கள். நீங்களும் கப்பல் படம் சக்சஸ் என்கிறீர்கள். அப்படியென்றால் எந்த படம்தான் நம்பர்-ஒன் என்று மீடியாக்கள் கேட்டபோது, ஒரே கிளாசில் ரெண்டு மாணவர்கள் முதல் மதிப்பெண் வாங்குவது மாதிரி எங்களைப்போன்று மீகாமன் படமும் வெற்றி பெற்றிருக்கலாம். எல்லா படமும் ஓடினால் நல்லதுதானே என்றார்.