பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், கன்னட நடிகரான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உத்தம வில்லன்'. ரமேஷ் அரவிந்த், கன்னடத்தில் 2006ம் ஆண்டு முதன் முதலாக இயக்கிய 'ராமா ஷாமா பாமா' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து சில கன்னடப் படங்களை இயக்கினார். தற்போது முதல் முறையாக தமிழில் 'உத்தம வில்லன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கன்னடத்தில் அவர் இயக்கிய முதல் படத்திலும், தமிழில் அவர் இயக்கும் முதல் படத்திலும் கமல்ஹாசன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
'உத்தம வில்லன்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக கமல்ஹாசன் சில வாரங்களாகவே அமெரிக்காவில் இருந்து வருகிறார். அவருடைய மேற்பார்வையில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான், பாலசந்தரின் மறைவுக்குக் கூட அவரால் உடனடியாக கிளம்பி வர இயலவில்லை என கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
தற்போது அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ், பாரமவுண்ட் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இறுதிப் பணிகளுக்கிடையே கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படத்தின் மிக்சிங் முடியும் தருவாயில் உள்ளது, டிரைலர் பணிகள் நிறைவடைந்து விட்டது. விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார். இப்படத்தின் முதல் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பே யு டியூபில் வெளியிடப்பட்டு, தொடர்ந்து எழுந்த சில விமர்சனங்களுக்குப் பிறகு சில மணி நேரங்களுக்குள்ளேயே நீக்கப்பட்டு விட்டது. புதிய டிரைலர் கண்டிப்பாக பிரமிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.