பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித்தின் அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு விடைகொடுத்து மங்காத்தா சூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு அஜித், கிரீடம் விஜய்யுடன் கூட்டணி சேரப்போகிறாராம். விஜய் இயக்கத்தில் முதன் முதலில் உருவான படம் கிரீடம். எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும் தயாரிப்பாளரின் கையை கடிக்காமல் விட்ட படம் கிரீடம். அவர் இயக்கிய மதராசபட்டினம் படத்தை பார்த்து வியந்து போன அஜித், அதே மாதிரி ஒரு ஹிஸ்டாரிகல் கதையை தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம். மதராசபட்டினம் வெற்றியில் திக்குமுக்காடியிருக்கும் கிரீடம் விஜய், புதிய கதையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தின் வாணிப நிலைதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.