பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மீகாமன் படத்தின் ஆடியோவை வெளியிட்ட அன்று ஹன்சிகா ஆஜராகவில்லை. ஆனால், அவர் வராததற்கு காரணமே, ஒரு பாடல் காட்சியில் அவரை அளவுக்கதிகமாக டைரக்டர் தோலுரித்து விட்டார். அதனால்தான் அவர் வரவில்லை எனறு சொன்னார் ஆர்யா. அதோடு அந்த காட்சியில் நடித்தபோது என் இமேஜை இப்படி கெடுத்து விட்டீர்களே என்று ஹன்சிகா கண்ணீர் விட்டு அழுததாககூட சொன்னார்.
ஆனால்,.இப்போது படம் திரைக்கு வந்திருக்கும் நிலையில, ஹன்சிகா அழுகிற அளவுக்கு அவர் இமேஜை கெடுக்கிற விசயம் எதுவுமே படத்தில் இல்லாதது பற்றி அப்படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனியைக்கேட்டால், அந்த டூயட் பாடல் காட்சியில், அவரை ஒரு ஷாட்டில் ஆடையே இல்லாமல் இருப்பது போன்ற இலைமறை காய்மறையாக காண்பித்திருப்பேன். அந்த காட்சியில் நடிததபோதுதான் சற்று கண்கலஙகினார் ஹன்சிகா.
மற்றபடி அந்த பாடலை உற்று நோக்கினால், ஹன்சிகாவை விட ஆர்யாதான் படுகவர்ச்சியாக நடித்திருப்பார். ஹன்சிகா அணிந்து நடித்த ஆடைகளையும், ஆர்யா அணிந்த ஆடைகளையும் ஒப்பிட்டால் ஹன்சிகா ஒன்றுமே இல்லை எனறுதான் தோன்றும். அந்த அளவுக்கு கவர்ச்சியான உடையணிந்து நடித்திருக்கிறார் ஆர்யா. இந்த உண்மையை இப்போது படத்தைப்பார்த்த ஹன்சிகாவே ஒத்துக்கொண்டு விட்டார் என்றார்.