Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது! -டைரக்டர் சாமி பேச்சு

29 டிச, 2014 - 11:51 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. தற்போது அவர் கங்காரு என்ற அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர்கள் ஆர்.சுந்தர்ராஜன், வி.சேகர், தேனப்பன், சிவா, தம்பி ராமைய்யா, ஆர்.கே.செல்வமணி, அர்ஜூனா, பிரியங்கா, கோமால் சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது, டைரக்டர் சாமி பேசுகையில், 4 வருட இடைவேளைக்குப்பிறகு இந்த கங்காரு படத்தை இயக்கியிருக்கிறேன். ஒரு படத்தை எப்படி தயாரிப்பாளர், ஹீரோ, இசையமைப்பாளர் என அனைவரையும் கலந்து பேசி இயக்க வேண்டும் என்பதை இப்போதுதான் நான் கற்றுக்கொண்டேன். அதேசமயம், நான் இயக்கிய முந்தைய படங்கள் சர்ச்சைக்குரியதாக வெளியானதற்கு நான் மட்டுமே காரணமல்ல. இருப்பினும், சினிமாவில் நான் சந்தித்த கசப்பான அனுபவங்களுக்குப்பிறகு இந்த படத்தை இயக்கிருக்கிறேன். இதற்கு முன்பு தமிழ்த்திரையுலகில் அண்ணன்-தஙகை பாசத்தை மையமாகக் கொண்டு பாசமலர்கள், முள்ளும் மலரும், கிழக்குச்சீமையிலே, பொற்காலம் என பல படங்கள் வந்திருக்கின்றன. அந்த படங்களின் வரிசையில் இந்த கங்காரு படமும் கண்டிப்பாக இடம்பிடிக்கும். மேலும், இந்த படத்தில் அண்ணனாக அர்ஜூனாவும், தங்கையாக பிரியங்காவும் நடித்துள்ளனர். இதில் அர்ஜூனா காட்டுப்பகுதியில் காலில் செருப்புகூட போடாமல் நடித்திருக்கிறார். ஒருநாள் அவரது காலில் அடிபட்டு பெருவிரல் நகம் உடைந்து வந்து விட்டது. இருப்பினும், ரோப் மற்றும், துள்ளி நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்தார். அந்த அளவுக்கு கதையாக மாறி நடித்துள்ளார். அதோடு, சமீபகாலமாக பெரும்பாலான படஙகளுக்கு யு/ஏ சான்றிதழ்தான் கிடைத்து வருகிறது. ஆனால் எனது கங்காரு படத்துக்கு யு சான்றிதழ் தரப்பட்டிருக்கிறது. என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் என்கிறார் சாமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in