ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படம் எக்கோடஸ். இது பைபிள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் மோசஸின் வாழ்க்கையை மையமாக கொண்டது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை காப்பாற்றி மோசஸ் செங்கடல் வழியாக அழைத்து செல்கிற கதை. மோசஸ் இஸ்ரேலியர்களை காப்பாற்றி அழைத்துச் செல்லும்போது கடல் இரண்டாக பிளந்து வழிவிடுவதாக வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் கடல் இயற்கை சீற்றத்தால் உள்வாங்கி வழி ஏற்பட்டதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கும்.
அதோடு மோசஸ் எப்போம் ஒரு கைத்தடியுடன் தான் காணப்படுவார் என்பது வேத குறிப்பு. படத்தில் அவர் வாளுடன் காணப்படுகிறார். வேத நூல்கள் மோசஸை இறைவனின் தூதராக குறிக்கப்பிடுகிறது. படத்தில் அவர் புரட்சியாளராக சித்தரிக்கப்படுகிறார்.
இது கிறிஸ்தவ நாடுகள் பலவற்றில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மொராக்கோ நாடு படத்துக்கு முதலில் தடைவிதித்தது. இப்போது எகிப்து நாடும் தடைவிதித்துள்ளது. ரிட்லி ஸ்காட் இயக்கியுள்ள படத்தில் கிறிஸ்டியன் பேல் மோசஸாக நடித்துள்ளார். படத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருந்தாலும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்புடன் ஓடி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.