ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்சினிமா இயக்குநர்களில் மிஷ்கின் வித்தியாசமான ஆள். கமல்ஹாசனை மேடையில் திட்டுவார், கால்மேல் கால் போட்டுக்கொண்டு பாக்யராஜ் பக்கத்தில் உட்காருவார், பிரஸ்மீட்டில் மீடியாக்களை புகழ்ந்து பேசுவார், வேறு விழாக்களில் மீடியாக்களை கழுவி ஊற்றுவார். இன்னொரு பக்கம் உலக இலக்கியங்களை கரைத்துக் குடித்ததுபோல் மண்டையாகப் பேசுவார். இதெல்லாம் மிஷ்கினுக்கு ஒருவித இமேஜைக் கொடுத்திருக்கிறது. அதாவது அறிவுஜீவி இயக்குநர் என்ற இமேஜை. அதனாலோ என்னவோ தீவிர இலக்கியம் பேசுபவர்கள் மத்தியில் மிஷ்கினுக்கு மதிப்பு கூடி இருக்கிறது. அவரை ஆராதிக்கும் மனப்பான்மையும் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் புத்தாண்டு தினத்தை திருவண்ணாமலையில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் மிஷ்கின் உடன் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதற்கு 1500 ரூபாய் கட்டணம்.