பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ், தெலுங்கில் ரஜினிகாந்த் பிறந்த நாளன்று வெளியான 'லிங்கா' படம் தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான நாளிலிருந்தே படம் மிகவும் நீளம் என்று கருத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தது. அதைத் தொடர்ந்து 175 நிமிடங்களாக அதாவது 2 மணி நேரம் 55 நிமிடமாக இருந்த படத்தின் நீளம் 166 நிமிடங்களாக அதாவது 2 மணி நேரம் 46 நிமிடமாக குறைக்கப்பட்டது. 9 நிமிடங்களைக் குறைத்த பின்னும் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான் என்ற விமர்சனம் மட்டும் அடங்கவில்லை. தெலுங்கில் படத்தின் காட்சிகளைக் குறைப்பதற்குள்ளாகவே படத்தை வெளியிட்ட அனைத்துத் தியேட்டர்களிலிருந்தும் தூக்கி விட்டார்கள்.
'லிங்கா'வின் ஹிந்தி டப்பிங் படம் நேற்று வட இந்தியாவில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மிகக் குறைந்த அளவு வரவேற்பே கிடைத்துள்ளதாம். கடந்த வாரம் வெளியான ஆமீர்கானின் 'பிகே' படம் பல திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாலும், படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடப் பிரமாதமாக அமைந்ததாலும் 'லிங்கா' படத்திற்கு பல முக்கியமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். அதோடு நேரடிப் படமான 'அக்லி' படமும் நேற்று வெளியானதால் அந்த படத்திற்குத்தான் ஓரளவு முன்னுரிமை கொடுத்துள்ளார்களாம். தமிழ், தெலுங்கில் தோல்வி என்று சொல்லப்படும் ஒரு படத்திற்கு நாங்கள் எப்படி திரையரங்குகளைக் கொடுக்க முடியும் என சில திரையரங்கு உரிமையாளர்கள் சொன்னதாக செய்திகளும் வெளிவந்துள்ளன.
இத்தனைக்கும் 'லிங்கா - ஹிந்தி'ப் படத்தில் 28 நிமிடத்திற்குக் காட்சிகளைக் குறைத்து விட்டுதான் வெளியிட்டிருக்கிறார்களாம். ரஜினியின் ஹீரோயிசம் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை நீக்கி விட்டார்களாம். ஆனால், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் சம்பந்தப்பட்ட எந்தக் காட்சியையும் நீக்கவில்லையாம். சோனாக்ஷி தற்போது ஹிந்தியில் முன்னணியில் இருப்பதால் அவரையும், ரஜினியையும் பிரதானப்படுத்தித்தான் விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது.