Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா...?

27 டிச, 2014 - 10:31 IST
எழுத்தின் அளவு:

'லிங்கா' பட வசூல் குறித்து படம் வெளியான இரண்டு நாட்கள் கழித்து பல்வேறு விதமான செய்திகள் வலம் வந்து ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தின. முதல் மூன்று நாட்களில் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக யாரோ கிளப்பி விட அதன் பின் அந்த வசூல் நிலவரத்தின் தொடர்ச்சியான வதந்தியைக் கூட யாரும் பரப்பி விடவில்லை. மாறாக படம் நான்காவது நாளில் இருந்து மிக மோசமாகத்தான் வசூலித்தது என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் குற்றம் சாட்டினர். இது 'லிங்கா' படத்தைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்றும் படம் சம்பந்தப்பட்டவர்கள் சொன்னார்கள்.


இதனிடையே, ரஜினிகாந்தை சந்திக்க சிலர் முயன்றும் அது நடைபெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், படம் சம்பந்தப்பட்டவர்களுடன் திரை மறைவில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் வரும் திங்கள் கிழமைக்குள் 'லிங்கா' படம் பற்றிய ஒரு சுமூகமான முடிவு எட்டப்படும் என்றும் தெரிகிறது. அரையாண்டு விடுமுறை ஆரம்பித்த பின் பல திரையரங்குகளில் மாலை நேரக் காட்சிகள் மற்றும் வார இறுதிக் காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.


படத்தின் பட்ஜெட் பற்றி படம் வெளியீட்டிற்கு முன் வந்த தகவல்கள் கூட பொய்யானவை என்கிறார்கள். 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்றும் சுமார் 60 கோடி ரூபாய் ரஜினிகாந்தின் சம்பளமாக வழங்கப்பட்டதென்றும் அப்போது ஒரு தகவல் பரவியது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை படத்தின் பட்ஜெட் ரஜினிகாந்த் சம்பளம் தவிர்த்து நியாயமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்தான், 100 கோடிக்கும் மேல் எல்லாம் செலவாகவில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால், வினியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் சரி செய்வது எளிதுதான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திங்கள் மாலைக்குள் 'லிங்கா' பிரச்சனை பற்றிய நல்ல செய்தி வந்துவிடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in