ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஸ்ரீதிவ்யா நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்கார துரை படங்கள் அவருக்கு நிறைய ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. முக்கியமாக, பி அண்ட் சி ஏரியாவில் இருந்துதான் அவரை அதிகப்படியான ரசிகர்கள் தொடர்பு கொண்டு அவரது நடிப்பு, அழகு குறித்து நற்சான்றிதழ் வாசிக்கிறார்களாம். அப்படி பேசும் ரசிகர்கள், இப்போது நடித்து வரும் நடிகர்களை விட இன்னும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று தங்களது அபிமான ஹீரோக்களின் பெயர்களையும் அவர் முன் வைக்கிறார்களாம். அதற்கு, கண்டிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் கூடிய சீக்கிரமே நான் நடிப்பேன் என்று ரசிகர்களுக்கு பதில் கொடுக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. குறிப்பாக, உங்களை கிளாமராக பார்ப்பதை விட ஹோம்லியாக பார்க்கத்தான் தாங்கள் விரும்புவதாகவும் ரசிகர்கள் அவரிடம் சொல்கிறார்களாம். அதனால் ரசிகர்கள் விரும்பும் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறி வரும் ஸ்ரீதிவ்யா, கிளாமருக்கு ஓகே சொன்ன சில இயக்குனர்களிடமும், ரசிகர்களின் இந்த கருத்தினை முன்வைத்து, தன்னை குடும்பப்பாங்காக காண்பிக்குமாறும் கேட்டுக்கொண்டு வருகிறாராம்.