'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான பரோட்டா சூரி, தற்போது வடிவேலு பாணியில் காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அதோடு, முதன்மை காமெடியனாக இருந்து வந்த சந்தானத்தின் காமெடி ரேட்டிங் தற்போது இறங்குமுகத்தில் இருப்பதால், அந்த இடத்தை பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார் சூரி. மேலும், அவர் நடித்து வரும் பல ஹீரோக்களின் மார்க்கெட் ஆட்டத்திலேயே இருப்பதால், இவர் இருப்பதை வைத்துதான் அந்த படங்களின் வியாபாரம் பேசபபட்டு வருகிறது. ஆக, தற்போதைய நிலவரப்படி பல ஹீரோக்களுக்கு சூரியின் தயவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், சந்தானம் ஹீரோவாகி விட்டதை அடுத்து, சூரியையும் ஹீரோவாக்கும் முயற்சியில் ஏற்கனவே சில டைரக்டர்கள் ஈடுபட்டனர். ஆனால் அப்போது அதை அவர் ஏற்கவில்லை. ஆனபோதும் இப்போது சிலர் அவருக்கு ஆசை காட்டி வருகிறார்களாம். ஆனால், அவர்கள் சொல்லும கதையை காது கொடுத்து கேட்க மறுக்கிறாராம் சூரி. இந்த பிடிவாதத்திற்கு என்ன காரணம் என்று கேட்டால், வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் ஹீரோவாக நடித்துதான் மார்க்கெட்டை விட்டார்கள. அதனால் அந்த நிலைக்கு நானும் ஆளாக மாட்டேன். இப்படி காமெடியனாகவே இருந்து விட்டுப்போகிறேன். இதுதான் எனக்கு எப்போதுமே சரியான சேப்டி என்கிறாராம் சூரி.