Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படமெடுத்து கையை சுட்டுக்கொண்ட கஞ்சா கருப்பு!

27 டிச, 2014 - 10:18 IST
எழுத்தின் அளவு:

பிதாமகன் படத்தில் பாலாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கஞ்சா கருப்பு. அந்த படத்திற்கு பிறகு ராம் படத்தில் அமீர் இவருககு இன்னும் வெயிட்டான வேடத்தை கொடுத்து கவனிக்கப்படும் நடிகராக்கினார். அப்படி இரண்டு முன்னணி டைரக்டர்களால் வளர்த்து விடப்பட்ட கஞ்சா கருப்பு, சென்னை ஆலப்பாக்கத்தில் தான் கட்டியிருக்கும் வீட்டிற்கு பாலா-அமீர் இல்லம் என்றே பெயர் வைத்திருக்கிறார்.


அந்த அளவுக்கு நான் நன்றியுள்ளவன் என்பதை வெளிப்படுத்தியிருககும் அவர், காமெடியில் தனக்கென ஒரு இடம் பிடித்த நிலையில், கருணாஸைப்பார்த்து தானும் கதையின் நாயகனாக ஆசைப்பட்ட கஞ்சா கருப்பு, ஒரு படத்தில் ஏற்கனவே நடித்தார். ஆனால் பைனான்ஸ் பிரச்சினையில் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதனால், அதையடுத்தும் கதையின் நாயகனாக நடிக்க கதை தேடி வந்தபோதுதான், மலையன் படத்தை இயக்கிய கோபி சொன்ன வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற கதை அவருக்கு பிடித்ததை அடுத்து, அநத படத்தை தயாரித்து நடித்தார் கஞ்சாகருப்பு. ஆனால், அப்படம் பல மாதங்களாக விற்பனையே ஆகவில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் அவரே வெளியிட்டார். ஆனால், கூட்டிக்கழிச்சுப் பார்த்தபோது பெரிய நஷ்டமாகி விட்டதாம். அதனால், இனிமேல் கதாநாயகன், கதையின் நாயகன் என்று எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறி வரும் கஞ்சா கருப்பு, தனக்கு தொடர்ச்சியாக சான்ஸ் கொடுத்து வந்த சில டைரக்டர்களை தொடர்பு கொண்டு இனி நான் முழுநேர காமெடி நடிகன்தான். அதனால் எனக்கு ஏதாவது காமெடி வேசம் இருநதால் கொடுங்கள் என்று உரிமையோடு கேட்டு வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in