அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கேரள மாநிலம், வைக்கத்தைச் சேர்ந்தவரான விஜயலட்சுமி 2013ம் ஆண்டு வெளிவந்த 'செல்லுலாய்ட்' மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்ற 'காட்டே...காட்டே...' என்ற பாடல் மூலம் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
'குக்கூ' திரைப்படம் மூலம் இவரை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்கடுத்து வெளிவந்த 'என்னமோ ஏதோ' படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இவரை 'புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன்...' என்ற பாடலைப் பாட வைத்து தமிழ் இசை ரசிகர்களிடையே கொஞ்சமாக அடையாளப்படுத்தினார்.
தற்போது, நேற்று வெளிவந்துள்ள 'வெள்ளக்கார துரை' படத்தில் டி.இமான் இசையில் அமைந்துள்ள 'காக்கா முட்டை காக்கா முட்டை....' என்ற பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்து இவரை நன்றாக அடையாளப்படுத்தியுள்ளது. அதோடு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் 'இடம் பொருள் ஏவல்' படத்தில் இவர் பாட்டி இடம் பெற்றுள்ள 'எந்த வழி போகுமோ...எந்த வழி சேருமோ...' என்ற பாடலும் இப்போதே சூப்பர் ஹிட்டாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கணீர் என்ற குரலில் தமிழை அழகாக உச்சரிக்கும் வைக்கம் விஜயலட்சுமி விரைவில் வையகம் முழுவதும் பேசப்படும் பின்னணிப் பாடகியாக உயர்வார்...