தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரத்குமார் நாயகனாக நடித்த விடியல், வேளச்சேரி ஆகிய படஙகள் இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன. அவர் போலீஸ் ஆபீசராக நடித்த நீ நான் நிழல் படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், வந்த வேகத்திலேயே ஓடி விட்டது. இநத நிலையில் ஏற்கனவே தன்னை வைத்து சில ஹிட் படங்களை கொடுத்த ஏ.வெங்கடேஷ் இயக்கும் சண்டமாருதம் படத்தில் தற்போது நடித்துள்ளார் சரத்குமார்.
இந்த படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியுள்ளதாம். ஆனால் பல காட்சிகளில் ஆபாசமான டயலாக்குகளையும் சேர்த்து படமாக்கினாராம் வெங்கடேஷ். அதனால் படப்பிடிப்பு நடந்தபோதே, இதென்ன இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளாக இருக்கிறது என்று புலம்பியபடிதான் நடிகர்-நடிகையர் நடித்தார்களாம்.
ஆனால், அப்போது அதைப்பற்றி கவலைப்படாமல் படமாக்கிய வெங்கடேஷ, தற்போது டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது வார்த்தைகள் ஓவராக இருப்பதை உணர்ந்தாராம். இந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை சென்சார்போர்டு கண்டதுண்டமாக்கி விடும் என்பதால் இப்போது டப்பிங்கில் நிறைய வசனங்களை மாற்றிக்கொண்டிருக்கிறாராம்.