மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே' ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் 'கயல்'. “மைனா, கும்கி” ஆகிய வெற்றிப் படங்களையடுத்து பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படம் வித்தியாசமான பின்னணியில் அமைந்த ஒரு காதல் கதை. இமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிரபு சாலமனின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படமாக இருக்கும், வசூல் ரீதியாகவும் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று இந்தப் படத்துடன் “வெள்ளக்கார துரை, மீகாமன், கப்பல்” ஆகிய படங்களும் வெளிவருகின்றன. கிறிஸ்துமஸ் தினத்தன்று இத்தனை படங்கள் வெளிவந்து போட்டியிடப் போவது ஆரோக்கியமான ஒரு விஷயமாகும்.