Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கே.பாலசந்தர் ஒரு சகாப்தம் »

அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

25 டிச, 2014 - 12:30 IST
எழுத்தின் அளவு:

விஜயகாந்த்: இயக்குனர் கே.பாலச்சந்தர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்


ஜெயலலிதா: அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் கே.பாலச்சந்தர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.


சந்திரபாபு நாயுடு (சீமாந்திரா முதல்வர்): பாலச்சந்தர் இயக்கிய மரோ சரித்ரா தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. எங்கள் விசாகபட்டினம் அவருக்கு பிடித்த நகரம். அவரது கனவு நகரம். அந்த நகரம் புதுப்பொலிவு பெறுவதை பார்க்காமலேயே அவர் சென்று விட்டது மிகுந்த வருத்தத்தை தருகிறது.


சந்திரசேகர்ராவ் (தெலுங்கானா முதல்வர்): தென்னிந்திய படங்களில் உயர்ந்த தரத்தை கொண்டு வந்தவர் கே.பாலச்சந்தர். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவுக்கும் பெரிய இழப்பு


ஜி.கே.வாசன் (த.மா.கா.தலைவர்): கே.பாலச்சந்தரின் புகழ் தமிழ் சினிமாவில் நேற்று, இன்று, நாளை வரலாறாக நிற்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எங்கள் குடும்பத்தோடு 40 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர்.


பாலசந்தர் ஒரு ஜாம்பவான்-சிதம்பரம்


இயக்குனர் பாலசந்தர் மறைவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவருடைய ரசிகன். 1970,80களில் அவரது படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. பார்த்து ரசிகராக மாறாதவர்கள் இல்லை. திரைத்துறையிலும், நாடகத்துறையிலும் ஜாம்பவனாக இருந்தவர். அவரின் படங்களில் முத்திரை பதித்தார் என்பதை மறுக்க முடியாது. திரையுலகினர் பலர் அவரை குருவாக ஏற்றுக் கொண்டனர். பல நடிகர், நடிகைகளை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர். சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர், என்றார்.


திரைதுறைக்கு பேரிழப்பு: ஸ்டாலின்


இயக்குனர் கே.பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், பாலசந்தரின் மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு. திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களை உருவாக்கிய மாபெரும் சகாப்தம், பாலசந்தர். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர். திரைதுறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர் என தெரிவித்தார்.


பாலச்சந்தர் மறைவு: ஆந்திர முதல்வர் இரங்கல்


ஐதராபாத் : இயக்குனர் பாலச்சந்தரின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


கலையுலகின் ஈடற்ற படைப்பாளி கே. பாலசந்தர்: வைகோ புகழஞ்சலி


இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கே.பாலசந்தர் மறைவிற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:


”தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளியான இயக்குநர் சிகரம் பாலசந்தர் மறைந்தார்! என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவரது புதல்வர் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத்துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப்பற்றி சொன்னேன்.


அவர் தந்த 'அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, சிந்து பைரவி, தண்ணீர் தண்ணீர், நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், வறுமையின் நிறம் சிவப்பு, எதிர்நீச்சல், இருகோடுகள், வானமே எல்லை' இவற்றைக் குறிப்பிட்டபோது, இருகோடுகளில் அவர் சித்தரித்த அறிஞர் அண்ணா, புற்றுநோயால் மிகவும் உடல் நலம் குன்றியபோதும்கூட தனது விருப்பத்தை அறிந்து எதிர்நீச்சல் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பண்பாட்டைக் கூறினார்.


இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்,

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in