'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சரத்குமார் நடித்த மகா பிரபு, ஏய் உள்பட சில படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தற்போது மீண்டும் சரத்குமாரை வைத்து சண்டமாருதம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மீராநந்தன், சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். ஓவியா கிளாமராக ஒரு ரோலில் நடித்துள்ளாராம். அதோடு இந்த படத்துக்கு அதிக கிளாமர் தேவைப்பட்டதால் ஒல்லிகுச்சியான தனது உடம்பை கொழுகொழுவென்று மாற்றி நடித்து வருகிறார் ஓவியா. மேலும், இதுவரை குணசித்ர வேடங்களில் அதிகமாக நடித்துள்ள தம்பி ராமைய்யா, இந்த படத்தில் ஓவியாவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு கிளுகிளுப்பான ரோலில் நடிக்கிறாராம்.அவரை எங்கு பார்த்தாலும் அவருக்குள் காதல் ஊற்றெடுத்து விடுமாம். அதனால் வச்ச கண் வாங்காமல் பார்க்கும் தம்பி ராமைய்யா, ஐ லவ் யூ சொல்வாராம். ஆனால், அப்படி அவர் காதலை ஓப்பன் பண்ணும் ஒவ்வொரு நேரமும் அவரை அலட்சியப்படுத்துவதுதான் ஓவியாவின் கேரக்டராம். அதோடு சில சமயங்களில் காதல் வயப்படும் தம்பி ராமைய்யா, ஓவியாவுடன் டூயட் பாடுவது போன்றும் சின்னச்சின்ன பிட் பாடல்களும் இந்த படத்தில் உள்ளதாம். ஆக, சண்டமாருதத்தில் சரத்குமாருடன் ஓவியாவுக்கு பாடல் காட்சி இருநதபோதும், தம்பி ராமைய்யாவும் அவரும் நடிப்பது போன்ற காட்சிகள்தான் அதிகமாக உள்ளதாம்.