'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிசோடா வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் - 10 எண்றதுக்குள்ள. த டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விக்ரம் லாரி டிரைவராக நடிக்கிறார். சென்னையிலிருந்து வட இந்தியாவுக்கு செல்லும் லாரி டிரைவர் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கதை. எனவே நேஷ்னல் ஹைவேக்களில்தான் 10 எண்றதுக்குள்ள படத்தின் அதிக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் கோவையில் படமாக்கப்பட்டு முடிந்தது. இந்த காட்சிகள் படமாக்கப்ட்டு முடிந்ததும் அடுத்தகட்டமாக விஜய்மில்டன் தலைமையிலான படக்குழுவினர் ஒரு சில காட்சிகளை படமாக்க நேபாளம் செல்ல இருக்கின்றன. அங்கே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இதுவே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்குமாம். நேபாளம் செல்வதற்கு முன் சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னையில் படமாக்க இருப்பதாகவும் தகவல். விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வருகிறது.