ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்குக் கூட போட்டி என்பது கொஞ்சமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள் வருடத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு படங்களில் மட்டுமோதான் நடிப்பார்கள். ஆனால், நடிகைகளைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு நான்கைந்து படங்களிலாவது நடிப்பார்கள். நடிகர்களைப் போல் அல்லாமல் அவர்களுக்கிடையே நல்ல போட்டி இருக்கும். இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு நடிகர்களைக் கூட எளிதில் ஒப்பந்தம் செய்து விடலாம், பொருத்தமான ஜோடியாக அழகான நடிகையரை ஒப்பந்தம் செய்வதுதான் கடினமான உள்ளது.
இந்தப் போட்டிகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். “ஒரு படம் என்னை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்று எனக்குள் நான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருப்பேன். நான் எந்த விதத்தில் சிறப்பானவள், என்னை நானே தயார்படுத்திக் கொள்வேன். எல்லோருக்கும் அனைவருடனும் போட்டி உள்ளது. ஆனால், இந்தப் போட்டி என்பது தொழில் ரீதியாக மட்டும்தான். நிஜ வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.