Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஸ்பெஷல் ஸ்டோரி: ஹீரோக்கள் தட்டுப்பாட்டில் கோலிவுட்

24 டிச, 2014 - 12:07 IST
எழுத்தின் அளவு:

2014ம் ஆண்டில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹீரோக்கள் புதிதாக வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஹீரோக்கள் தட்டுப்பாட்டில்தான் இருந்தது தமிழ் சினிமா. முன்பெல்லாம் ஒரு ஹீரோ ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடிப்பார்கள். 80 களில் ரஜினியும், கமலும் வருடத்துக்கு பத்து படங்கள் வரை நடித்தனர். கடந்த சில வருடங்கள் முன்பு வரை சத்யராஜ் அப்படி நடித்துக் கொண்டிருந்தார்.


இப்போது ஆண்டுக்கு மூன்று படங்கள் வரை நடித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. 2014ம் ஆண்டு கமல் நடித்த படமே வெளிவரவில்லை. ரஜினி நடித்து லிங்கா ரிலீசானது. அனிமேஷன் படமான கோச்சடையான் ரிலீசானது. அஜீத் வீரம் படத்தில் மட்டும் நடித்தார். ஜில்லா, கத்தி என்ற இரண்டு படங்களில் நடித்தார் விஜய், சூர்யா நடிப்பில் அஞ்சான் மட்டும் ரிலீசானது. விதார்த், விமல் ஆகியோர் தலா 4 படங்களில் நடித்தார்கள். விக்ரம் பிரபு 3 படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயன் பிசியாக இருந்தாலும் மான்கராத்தே மட்டும்தான் ரிலீசானது.


விஜய்சேதுபதி, ஜெய், விஷ்ணு, விஷால், போன்றவர்கள் இரண்டு படங்களில் நடித்தார்கள். ஹீரோக்களை வைத்து படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தும், அவர்கள் குறிப்பிட்ட பத்து ஹீரோக்களையே விரும்புவதால் ஹீரோக்களின் படங்கள் குறைவாகத்தான் வெளிவந்தது.


2014ம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ஹீரோக்கள் வந்தும் அவர்கள் யாரும் டாப் பத்து ஹீரோக்களுக்குள் வரவில்லை. இராமானுஜன் படத்தில் நடித்த அபிநய், நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ், கயல் படத்தில் நடித்த சந்திரன், வாயை மூடி பேசுவோம் படத்தில் அறிமுமாக மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஆகியோர் மட்டுமே கொஞ்சம் கவனிக்க வைத்தார்கள். ஆனால் அவர்களால் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. கடந்த ஆண்டுகளில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மாதிரி இந்த ஆண்டு புயல்மாதிரி ஹீரோக்கள் யாரும் அறிமுகமாகவில்லை. சிம்ஹா வேகமாக வளர்ந்து வந்தாலும் அவர் சென்ற ஆண்டே அறிமுகமாகிவிட்டார்.


2015லாவது பழைய ஹீரோக்களை ஓரங்கட்ட புதிய அலை புறப்பட்டு வருகிறதா? என்று பார்க்கலாம்...

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in