'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தின் பாடல்கள் அமெரிக்காவில் வௌியிடப்பட இருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன், பாபநாசம் என மூன்று படங்களில் நடித்து வந்தார். இதில் மூன்று படங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. மூன்று படங்களில் உத்தமவில்லன் படம் முதலில் ரிலீஸாகிறது.
உத்தமவில்லன் படத்தில் கமல் இரண்டு மாறுபட்ட காலங்களில் நடித்துள்ளார். அவருடன் ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் கமல்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழாவை அமெரிக்காவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. ஆனால் இதனை தயாரிப்பாளர் உறுதி செய்யவில்லை. அமெரிக்காவிலிருந்து கமல் வந்தபிறகு, அவருடன் பேசி, இசை வௌியீட்டு விழாவை எங்கு நடத்தலாம் என்பதை முடிவு செய்ய இருக்கிறார்களாம்.
ஜனவரியில் உத்தமவில்லன் இசை வௌியீட்டு விழாவும், அதனைத்தொடர்ந்து பிப்ரவரியில் படமும் ரிலீஸாகும் என தெரிகிறது.