'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் என சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார் விஜயசேதுபதி. இதில் தான் ஹீரோவாக நடித்த படங்களில்கூட டூயட் காட்சிகளில் நடனமாடாத அவர், முதன்முறையாக திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாடினார் மேலும், அவருக்கு மார்க்கெட் இருப்பதால் அவர் தங்கள் படத்தில் தலைகாட்டினால் வியாபாரத்துக்கு பலமாக இருக்கும் என்று இப்போது பலரும் அவரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முண்டியடித்து வருகின்றனர்.
முக்கியமாக, அவரை ஹீரோவாக நடிக்க கதை சொல்லச்செல்பவர்களைவிட கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். இவர்களெல்லாம் விஜயசேதுபதி படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாளில் தனது அலுவலகத்துக்கு வரும்போது, மொய்த்துக்கொள்கிறார்களாம். இதனால், விட்டால் நம்மை கெஸ்ட் நடிகர் என்கிற முத்திரை குத்தி விடுவார்கள் போலிருக்கே என்று அதிர்ச்சியடைந்துள்ளார் விஜயசேதுபதி.
அதனால், இப்போது இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் விஜயசேதுபதி. தன்னை வைத்து ஏற்கனவே படம் இயக்கியவர்களே தொடர்பு கொண்டு கேட்டாலும், தற்போது கைவசம் உள்ள புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், மெல்லிசை, நானும் ரெளடிதான், ஆரஞ்சு மிட்டாய் என பல படங்களை பட்டியலிட்டு, இந்த படங்களில் நடிக்கவே போதிய நேரம் இலலாமல் அவதிப்படுகிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள் என்று நாசூக்காக சொல்லி எஸ்கேப்பாகி வருகிறார் விஜயசேதுபதி.