பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
1980-90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவரது மகன் சித்து இப்போது உயிரே உயிரே என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிவியுள்ளார். சித்து ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். தனது மகன் ஹீரோவாகியுள்ள படத்தை ஜெயப்பிரதாவே தயாரிக்கிறார். ரொமான்டிக் படமாக இப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வௌியிடப்பட்டது. முன்னதாக இப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினியிடம் காண்பித்துள்ளார் ஜெயப்பிரதா. டிரைலரை பார்த்து ரஜினி பாராட்டினார். மேலும் தனது லிங்கா படத்தின் தியேட்டர்களிலும் உயிரே உயிரே டிரைலரை வௌியிட ஏற்பாடு செய்தார்.
இப்போது அதையும் தாண்டி இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்லியுள்ளாராம். ரஜினியிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத படக்குழு சந்தோஷத்தில் திளைத்துள்ளதாம். விரைவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம்.