கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ் திரையுலகில் பல்வேறு புகழ்பெற்ற நடிகர்கள் தங்களது குரல்வன்மையால் பெரும்பெயர் பெற்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் VTV கணேஷ். 'விண்ணைத்தாண்டி வருவாயா', வானம், ஒஸ்தி, 'இங்க என்ன சொல்லுது', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'நவீன சரஸ்வதி சபதம்', 'போடாபோடி' என ரசிக்க வைத்த இவரது புதிய படம் 'கப்பல்'.
“'கப்பல்' ஃப்ரெண்ட்ஷிப் லவ்னு ஜாலியா யூத்தா ஒரு படம். நான்தான் காதலை சேர்த்து வைக்கும் தேவதையாக வருகிறேன். வைபவ்-க்கு ஹெல்ப் பண்றன் நான் 'கார்குரல் கண்ணன்'. படத்தில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலும் ஒரு லவ் டாக்டரா என்னை பார்க்கிறார்கள். சில பேர் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி சேர்த்து வைக்க சொல்றாங்க” என சிரித்தார்.