ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அர்பாஸ் கான் தயாரிப்பில், டோலி கி டோலி என்ற படம் தயாராகியுள்ளது. சமீபத்தில் வௌியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில், ''பாபாஜி கா துல்லூ....'' என்ற பாடல் ஒன்று உருவாகிறது. இதற்கு சாஜித் வாஜித் இசையமைத்துள்ளார். இப்பாட்டில் வரும் ''பாபாஜி கா துல்லூ'' என்ற வரிகள், பிரபல டிவி நிகழ்ச்சியை நடத்தி வரும் காமெடி வித் கபில் சர்மா என்ற நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. இதனால் முறையாக கபில் சர்மாவிடம் அனுமதி கேட்டுள்ளார் அர்பாஸ் கான். கபில் சர்மாவும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் ஓ.கே. சொல்லிவிட்டார். கபில் சர்மா, அர்பாஸ் கானின், அப்பாஸ் முஸ்தானில் பணியாற்றி வருகிறார். அதன்காரணமாக அர்பாஸ்க்கு ஓ.கே. சொல்லியுள்ளார் கபில் என்பது குறிப்பிடத்தக்கது.