ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை த்ரிஷாவுக்கும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபரும் பட அதிபருமான வருண்மணியனுக்கும் காதல் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் பரபரப்பாக அடிபட்டது. த்ரிஷா வருண்மணியன் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படமும் வெளியானது. அந்த செய்தியை வருண்மணியன் மறுக்கவில்லை. த்ரிஷா சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு பிறகு மறுப்பு தெரிவித்தார். அதுவும் தங்களுக்கு இடையில் காதல் இல்லை என்றோ.. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றோ த்ரிஷா மறுக்கவில்லை. அதைப் பற்றி இப்போது பேசுவது என்பது அவசியமில்லாதது. நேரம் வரும்போது என் திருமணம் பற்றி நானே தெரிவிப்பேன் என்ற பூசி மொழுகி பதில் சொன்னார். த்ரிஷா வருண்மணியன் காதல் விவகாரம் குறித்த செய்திகள் அடங்கிவிட்டாலும், அவர்க்ள இருவருக்கும் இடையிலான சந்திப்பும் நெருக்கமும் முன்னைவிட அதிகமாகிவிட்டது. அண்மையில் தன் சொந்த செலவில் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஆக்ரா, டெல்லி, நேபாளம் என த்ரிஷாவை அழைத்துக் கொண்டு ஜாலி ட்ரிப் சென்று வந்தார் வருண் மணியன். இந்நிலையில், இன்று பிரபல ஆங்கில பத்திரிகையில் தன் கட்டுமான நிறுவனத்திற்காக பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்கள் கொடுத்திருந்தார் வருண்மணியன். அதை ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார். வருண்மணியனின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருந்தார் த்ரிஷா. இதன் மூலம் தன் வருங்கால கணவரின் நிறுவனத்துக்கு தன் பங்குக்கு பப்ளிசிட்டி தேடிக்கொடுத்திருக்கிறார். ட்விட்டரில் த்ரிஷாவை 12.60 லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள். வருண்மணியனின் கம்பெனி விளம்பரத்தை ஒரு நொடியில் 12.60 பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் த்ரிஷா. எதிர்காலத்தில த்ரிஷா வருண்மயினுக்கு பொறுப்பான பொண்டாட்டியாதான் இருப்பார் போல இருக்கு..