Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல்அகர்வாலுக்கு அதிர்ச்சி கொடுத்த அலியா பட்!

22 டிச, 2014 - 10:26 IST
எழுத்தின் அளவு:

தமிழில் ஜில்லா படததிற்கு பிறகு எடக்குமடக்காக சம்பளம் கேட்டதால், நிராகரிக்கப்பட்டு தெலுங்குக்கு சென்ற காஜல்அகர்வால், அங்கு ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் என முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்தார். தற்போது தமிழில், தனுசுடன் மாரியில் நடித்து வருபவர், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் டெம்பர் என்ற படத்திலும் நடிக்கிறார்.


முந்தைய படங்களில் கவர்ச்சியை வாரி வழங்கிய காஜல், இந்த படத்தில் கவர்ச்சிக் கதவை இறுக மூடிக்கொண்டாராம். காரணம் கேட்டபோது, இந்த கதைக்கு கவர்ச்சி அவசியமில்லை அதனால் காண்பிக்கவில்லை என்று கேசுவலாக பதிலளித்து விட்டாராம். ஆனால், டைரக்டரோ, இளவட்ட ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் கவர்ச்சி அவசியம் தேவை என்று வலியுறுத்திய பிறகும் காஜல் அசைந்து கொடுக்கவில்லையாம்.


அதனால் இப்போது அதிரடி கவர்ச்சி காண்பிக்கும் நோக்கத்தில் அந்த கதையில் இன்னொரு ஹீரோயினியை கொண்டு வந்து, இநதி நடிகை அலியாபட்டை புக் பண்ணியிருக்கிறார்களாம். அதுவும் ஜூனியர் என்டிஆரே அவரை ஓகே செய்திருக்கிறாராம். விளைவு, இப்போது காஜலை டம்மி ஹீரோயினியாக்கி விட்டு, அலியாபட்டை முக்கிய கதாநாயகியாக்கும் முயற்சி நடக்கிறதாம்.


இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் காஜல்அகர்வால். அதனால், இனி இதை காரணம் காட்டியே தெலுங்கு டைரக்டர்கள் தன்னை ஓரங்கட்டுவார்கள் என்பதால், தமிழில் ஸ்டெடியாக கால்பதிக்கும் திரைமறைவு வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் காஜல்அகர்வால்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in