கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மதிப்பிற்குரிய கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு,
15 வருடங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் லிங்கா. ஏக எதிர்பார்ப்புகள் உடன், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல; அதற்கும் அப்பாற்பட்ட கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் மற்றும் ரஹ்மானின் இசைப்பிரியர்கள். இவர்களின் தனிப்பட்ட ரசனைகளுக்கு, உங்களால் சரியான தீனி போடப்பட்டுள்ளதா? இக்கேள்விக்கான பதில் என்னவென்று கடைக்கோடி ரசிகனுக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும்; உங்களுக்கும் தெரிந்திருக்கும்!
சூப்பர் ஸ்டாரின் அறிமுகம் எப்படி இருக்க வேண்டும்? சிலிர்க்க வைக்க வேண்டாமா? 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'எம்பேரு படையப்பா' போன்ற பாடல்களில் இருந்த ரஹ்மானின் இசைமெட்டுகள் மற்றும் வைரமுத்துவின் வரிகள், இவற்றை எதிர்பார்த்துப் போனால், எதுவும் எடுபடவில்லை. 'இதுவும் கடந்து போகும்'
என்பதுபோல், மனதில் தங்காமல் சென்று விட்டது. முதல் பாடலிலேயே ஏமாற்றத்தைப் பரிசளித்து விட்டீர்கள். படையப்பா மற்றும் முத்துவில், ரஜினி தோற்றுப் போகும்போது எங்களுக்குள் ஒரு வலி ஏற்படுத்தியது தங்களின் திரைக்கதை! ஆனால், 'லிங்காவில் திரைக்கதையே இல்லை' என்பதுதான் வலி!
படையப்பா போல் அல்லாமல் லிங்காவை வெறும் ஒரு படமாகத்தான் பார்த்தோம். ஜெயித்தால் ஜெயித்து, தோற்றால் தோற்று, அழுதால் அழுது, சிரித்தால் சிரித்து ரஜினி உடனேயே பயணிக்கும் ரஜினி ரசிகனின் ஆத்மார்த்த அனுபவம் 'லிங்கா'வில் மிஸ்ஸிங்! படம் முடிந்ததும், ''கோச்சடையானை சிறந்தவனாக்கி விட்டார் கே.எஸ்.ரவிக்குமார்” என, ஒரு ரசிகன் அலறினான். எனக்கு அவன்மேல் கோபம் வரவில்லை!
ஏமாற்றத்துடன்,
-சேஷ ராஜ சங்கரன், மதுரை.