கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டு அந்த டீசருக்கு 'லைக்' கொடுத்த விஷயத்தில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. இதுவரை சுமார் 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள அந்த டீசரை 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சுமார் 20 நாட்களுக்குள் அவ்வளவு பேர் பார்த்துள்ளதும் ஒரு சாதனைதான்.
அதையடுத்து 'என்னை அறிந்தால்' படத்தின் சிங்கிள் டிராக் ஆன 'அதாரு..அதாரு...' யூடியூபில் கடந்த 10ம் தேதியன்று வெளியானது. ஆனால், அதற்கு இருவிதமான வரவேற்புகள் இருந்தன. அஜித் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் பிடித்திருந்தாலும், பொதுவான இசை ரசிகர்கள் அந்தப் பாடல் ஹிட் வரிசையில் சேராது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.