Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வைபவ்!

21 டிச, 2014 - 10:12 IST
எழுத்தின் அளவு:

வெங்கட்பிரபுவின் பாசறை நடிகராக சரோஜாவில் என்ட்ரி கொடுத்தவர் வைபவ். அதையடுத்து, கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி போன்ற படங்களில் நடித்தவர், டமால் டுமீல் என்ற படத்தில் ஷோலோ ஹீரோவாக வரிந்து கட்டினார். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் ஓடவில்லை. ஆனால் நயன்தாராவுடன் அவர் நடித்த நீ எங்கே என் அன்பே என்ற படத்தில் நடித்த போலீஸ் வேடம் வைபவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெயர் வாங்கிக்கொடுத்தது.


இந்த நேரத்தில்தான் பிரமாண்ட இயககுனர் ஷங்கரின் உதவியாளர் இயக்கத்தில் கப்பல் படத்தில் நடித்தார் வைபவ். ஆனால் எந்தவித பரபரப்பும் இல்லாமல் வளர்நது வந்த அந்த படத்தை டைரக்டர் ஷங்கே தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுவதால், அப்படம் இப்போது பிரமாண்ட படமாகி விட்டது. அதனால் கவனிக்கப்படும் நடிகராகி விட்டார் வைபவ்.


அதனால் சிவகார்த்திகேயன்,விஜயசேதுபதி என்று வருடக்கணக்கில் அலைந்து கொண்டிருந்த சில இயக்குனர்கள் இப்போது வைபவிடமும் கதை சொல்ல் வரிசைகடடி வருகின்றனர். இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கிறார் வைபவ். புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை உள்பட சில படங்களை இயக்கிய எஸ்.எஸ.ஸ்டேன்லி இயக்கும் அந்த படத்துக்கு ஆதாமும் ஆப்பிள்களும் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறதாம். வைபவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறாராம். இந்த படமும் கப்பல் படம் போன்று காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாம். ஆக, கப்பல் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து வைபவும் கோடம்பாக்க ரேஸில் முக்கியமான நடிகராகி விடுவார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in