Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைரக்டர் கதிரின் பெங்களூர் சென்டிமென்ட்!

21 டிச, 2014 - 10:08 IST
எழுத்தின் அளவு:

இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கதிர். இதயம் படத்தில் முரளி-ஹீராவை நடிக்க வைத்த அவர், காதல் தேசம் படத்தில் வினீத்துடன் அப்பாஸை நடிக்க வைத்தார். தபு நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு காதலர் தினம் படத்தில் குணாலை அறிமுகம் செய்தார். இவர்கள் இரண்டு பேருமே அவர்கள் நடித்த படங்கள் ரிலீசான நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்கள்.


ஆனால் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்த கதிர், காதல் வைரஸ் படத்தின் தோல்விக்கு பிறகு படம் இயக்கவில்லை. சில படங்களை இயக்குவதாக அறிவிப்புகள வந்தன. ஆனால், படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலையில், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுககுப்பிறகு தற்போது ஒரு கன்னட படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் கதிர்.


அந்த படத்திற்கு நான் லவ் டிராக் என்ற பெயர் வைத்துள்ள கதிர், இரண்டு புதுமுகங்களையே ஜோடி சேர்த்துள்ளார். அதோடு, காதல் தேசம் படத்தை இயக்குவதற்கு முன்பு, பெங்களூரில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பாஸை கண்டுபிடித்த அவர், இப்போது இந்த படத்திற்கான கதையையும் அநத பெங்களூரில் கண்ட காட்சிகளை வைத்துதான் உருவாக்கியிருக்கிறாராம். அந்தவகையில், பெங்களூர் சென்டிமென்ட் தனக்கு ஏற்கனவே ஒர்க்அவுட்டாகியிருக்கிறது என்பதால்,. இப்போது இந்த கன்னட படத்தின் படப்பிடிப்பை பெங்களூரிலேயே தொடங்கியிருக்கிறாராம் கதிர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in