பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
கே.சி.பொகாடியா இயக்கி வரும் பரபரப்பு படம் ''டிர்ட்டி பாலிடிக்ஸ்''. பாலியல் தொழிலாளியான மல்லிகா ஷெராவத், ஒரு மாநிலத்தின் முதல்வராக வர கனவு காண்கிறார் அதற்கு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில், மல்லிகா ஷெராவத் உடன் பாலிவுட்டின் மூத்த நடிகர்கள் ஓம் பூரி, நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் மற்றும் அஸ்தோஸ் ராணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து இயக்குநர் கே.சி.பொகாடியா கூறுகையில், ஓம் புரி, நஸ்ரூதின் ஷா, அனுபம் கெர் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் எல்லாம் ரொம்ப சர்வசாதரணமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஜாக்கி ஷெரப்பும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். ஆனால் இம்முறை வித்தியாசமாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.