ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு மாரீசன், கருடா என்று தலைப்புகள் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானபோதும், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், நல்ல டைட்டிலை அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் டைட்டிலை உடனடியாக அறிவிக்காமல் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியதுபோல், விஜய்யும் தனது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து புதிய பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம்.
மேலும், சமீபகாலமாக அதிரடி ஆக்சன் படங்களாக நடித்து வரும் விஜ்ய, இந்த படம் சரித்திர பின்னணி கொண்டது என்பதால், இரண்டில் ஒரு வேடத்தில் அரசர் கெட்டப்பில் வருகிறாராம். அபபடி அவர் தோன்றும் அந்த காட்சிகள் முந்தைய ஜென்மத்தில் அவர் ராஜாவாக ஆண்ட காலகட்டத்தில் நடக்கிறதாம். அதனால் முதன்முறையாக அரசர் கெட்டப்பில் காஸ்டியூம் அணிந்து நடிக்கும் விஜய், வாள் சண்டையும் போடுகிறாராம்.