பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
'யு.டி.வி.' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் புறம்போக்கு. எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படம் பொதுவுடமை சிந்தனைகளை உள்ளடக்கிய சமூக கருத்துக்களை சொல்லும் படமாம். ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கம்யூனிஸ்ட்டுகளாக நடிக்கின்றனர். இவர்களின் பாத்திர படைப்பு பல கம்யூனிஸ்ட் தியாகிகளின் சாயலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பின்னிமில்லில் சிறைச்சாலை செட் போடப்பட்டு தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது 'புறம்போக்கு' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பெங்களூரில் நடந்து வருகிறது. இங்கு ஹெலிகாப்டரை வைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். புது இசை அமைப்பாளர் வர்ஷன் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் புறம்போக்கு படத்தை வெளியிட உள்ளனர். பிப்ரவரி மாதம் உத்தமவில்லன் வெளியானால் சில வாரங்கள் தள்ளி வெளியிடுவார்களாம்.