ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
இளம் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தைத்தொட்டவர் அனிருத். ரஜினியின் உறவினர் என்ற விசிட்டிங்கார்டை வைத்து திரையுலகுக்கு வந்த அனிருத்துக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவே தான் இயக்கிய 3 படத்தில் முதல் வாய்ப்பு கொடுத்தார். ரஜினியின் மருமகனான தனுஷ், அனிருத்துக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவரை உச்சத்தில் உட்கார வைத்துவிட்டார். இத்தனை சீக்கிரத்தில் இசைத்துறையில் மிகப்பெரிய புகழ் கிடைத்ததினாலோ என்னவோ அனிருத்துக்கு அதன் அருமை புரிய வில்லையா... அல்லது அவருக்கு சரக்கு இல்லையா என்று தெரியவில்லை.
சமீபகாலமாக அனிருத் இசையமைத்த பல பாடல்கள் அவருடைய ஒரிஜினல் சரக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாடலுக்கு மட்டுமல்ல, பின்னணி இசைக்கும் வெளிநாட்டு படங்களிலிருந்தும், ஆல்பங்களிலிருந்தும் சுட்டுத்தான் இசையமைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு அனிருத் மீது சுமத்தப்பட்டு வருகிறது. கத்தி படத்துக்கு இசையமைத்தபோதும் அனிருத் எங்கிரந்து எல்லாம் காப்பியடித்தார் என்று ஆதாரத்துடன் சில வீடியோக்கள் யூடியூபில் வெளியிடப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத், இந்தப்படத்தின் இசையையும் பல்வேறு இடங்களில் இருந்தே சுட்டிருக்கிறார். இதையும் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்து, ஒரிஜினல் இசையையும், அனிருத் காப்பியடித்ததையும் தொகுத்து வீடியோவாக யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.