வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சரத்குமாருக்கு 60 வயது கடந்து விட்டது என்றாலும் ஓவியா, மீரா நந்தடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். காரணம் அவன் தன்னை எப்போதும் இளமையாக வைத்திருப்பதுதான். 30 வருடங்களுக்கு முன்பே சென்னை ஆணழகன் டைட்டில் வென்றவர். இப்போதும் உடற்பயிற்சிதான் அவர் உயிர்.
இன்றைய இளம் நடிகர்களில் சென்னைக்குள் எங்கு நடந்தாலும் சைக்கிளிலேயே படபிடிப்புக்கு செல்கிறவர் ஆர்யா. இது உடலுக்கும் நல்லது. டிராபிக்கில் மாட்டாமல் போய்ச் சேரலாம். தனது காருக்கு பின்னால் எப்போதும் சைக்கிளை கட்டி தொங்க விட்டிருப்பார். ஆர்யா வழியில் இப்போது சரத்குமாரும் சைக்கிள் பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சரத்குமாரின் வீடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் உள்ளது. அங்கிருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு தனி ஆளாக மகாபலிபுரம் வரை சென்று வருகிறார். சில நேரங்களில் நண்பர்களை அழைத்துச் செல்கிறார்.
"சைக்கிள் எனக்கு புதிதில்லை. என் வாழ்க்கை ஆரம்பித்தே சைக்கிளில்தான். சைக்கிளில் சென்று பேப்பர் போட்டு சம்பாதித்திருக்கிறேன். அதோடு சைக்கிள் பயணம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க பயன்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. சைக்கிள் ஓட்டும்போது உடம்பில் உள்ள அத்தனை பாகங்களும் வேலை செய்கிறது. சைக்கிள் மாதிரி ஒரு உடற்பயிற்சி கருவி வேறு இல்லை" என்கிறார் சரத்குமர்.