தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சலீம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் இந்தியா பாகிஸ்தான். ஆனந்த் இயக்குகிறார். இவர் யாரடி நீ மோகினி மித்ரன் ஜவஹரிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவரது தம்பி ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனியின் படத்துக்கு இன்னொருவர் இசை அமைப்பது இதுதான் முதல் முறை. தெலுங்கு கன்னட படங்களில் நடித்த சுஷ்மா தமிழில் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
இந்தப் படம் நான், சலீம் படங்களின் தொடர்ச்சி இல்லையாம். காதலனும், காதலியும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி மோதிக்கொண்டே இருக்கிற ஈகோ கதை. ஈகோவால் வரும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. நான், சலீம் படங்களில் கோப முகத்தோடு சீரியசாக நடித்த விஜய் ஆண்டனி இதில் சிரித்த முகத்தோடு காமெடியெல்லாம் செய்கிறார். பொள்ளாச்சியிலும், சென்னையிலும் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி சைத்தான் என்ற படத்தில் நடிக்கிறார். இது திகில் படம். அதற்கு பிறகு சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் நடிக்கிறார். இது சமூக பிரச்சினை ஒன்றை அலசப்போகும் படம்.