ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிந்துசமவெளி படத்தில் அமலாபாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஹாரிஸ் கல்யாண். அந்த படத்தின் மாமனார்-மருமகளின் பாலியல் உறவைப்பற்றியது என்றாலும், தன்னை பாதிக்காது என்றுதான் நடித்தார் அவர். ஆனால், அந்த படம் வெளியானபோது ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்ததால் ஆடிப்போனார் ஹாரிஸ் கல்யாண். இதனால் தனது சினிமா கேரியர் பாதித்து விடுமோ என்று தடுமாறிக்கொண்டிருந்தார். சிறிய இடைவெளிக்குப்பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம் படங்களில் நடித்த அவர், வெற்றிமாறன் வெளியிட்ட பொறியாளன் படத்தில் பின்னர் நடித்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், ஹாரிஸ் கல்யாணின் மீது திரையுலகினரின் கவனம் திரும்பியது.