நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
'டெலிடட்' என்றால் தமிழில் 'நீக்கப்பட்ட' என்று அர்த்தம். 'லிங்கா' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில்...என்றவுடன் குழம்ப வேண்டாம். அவை யு டியூபில் வெளியிடப்பட உள்ளதாம். இந்தத் தகவலை படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார். நேற்று பல பத்திரிகையாளர்களையும், டிவி சேனல்களையும் சந்தித்து கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி கொடுத்தார். பொதுவாக, பட வெளியீட்டுக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்திக்கும் இயக்குனர்கள் மிகவும் குறைவு. 'லிங்கா' படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும் கே.எஸ்.ரவிக்குமார் அனைத்து விதமான கேள்விகளுக்கும் வெளிப்படையான பதிலளித்தார்.
அப்போது, ராஜா லிங்கேசுவரன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்த காட்சிகளுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது, அதையே நீங்கள் முழுப் படமாக எடுத்திருக்கலாமே என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ரவிக்குமார், அந்தக் காட்சிகளே ஏறக்குறைய ஒரு முழு படம் அளவிற்கு கை வசம் இருக்கிறது. ஆனால், படம் வெளியாகும் முன்பே படத்தின் நீளம் கருதி அவற்றை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டோம்.
“ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் 'லிங்கா' என்ற கதாபாத்திரம் மூலம் ஸ்டைலான ஜாலியான மற்றொரு ரஜினியையும், அவருடன் சந்தானம் போன்ற நண்பர்களையும் சேர்த்து ஜாலியான காட்சிகளை உருவாக்கினோம்.
ராஜா லிங்கேசுவரன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து படத்தில் சேர்க்க முடியாத சில 'டெலிடட்' காட்சிகளை யு டியூபில் வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது. அதை விரைவில் எதிர்பார்க்கலாம்,” என்றார்.
ஆனால், படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சிகளை இப்போது வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். அதற்கு இன்னும் சில வாரங்களாவது ஆகலாம். அதுவரை ரஜினி ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன் 'ஜிகர்தண்டா, கத்தி' படத்தின் 'டெலிடட்' காட்சிகள் சில, யு டியுபில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.