மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகர் அலி ஜாபர். தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், லாகூரை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் சங்கம், அலி ஜாபருக்கு விருது எல்லாம் கொடுத்து கவுரவித்துள்ளது. மேலும் இந்த சங்கத்தில் அவரை கவுரவ உறுப்பினராகவும் இணைத்துள்ளது. இந்த சங்கத்தில் ஏற்கனவே மறைந்த பாகிஸ்தானின் பெனாசிர் புட்டோ, முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானி, முன்னாள் பஞ்சாப் கவர்னர் கோசா, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட், குலாம் அப்பாஸ், ஓமர் செரீப், இந்திய பத்திரிகையாளர் குல்தீப் நாயர் உள்ளிட்ட பலர் கவுரவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் விட மிகவும் இளம் வயதில் கவுரவிக்கப்பட்ட ஒரே நபர் அலி ஜாபர் தான்.
இதுகுறித்து அலி ஜாபர் கூறுகையில், இளம் வயதில் நான் கவுரவிக்கப்பட்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. வார்த்தைகள் வரவில்லை. இந்த விருதை பெற்ற போது மீண்டும் தாய்வீட்டிற்கு திரும்பிய ஒரு ஆனந்தம் கிடைத்தது என்று