சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கியவர் முத்தையா. அவர் தற்போது கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண், கோவை சரளா என முன்னணி கலைஞர்களை வைத்து, 'கொம்பன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தையும் தனது முதல் படத்தைப்போலவே மதுரை கதைக்களத்தில் இயக்கியிருக்கும் அவர், தனது முதல் பட நாயகி லட்சுமிமேனனையே இந்த படத்திலும் நாயகியாக்கியிருக்கிறார்.
அதோடு, கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன், மதுரை மண்வாசனையில் உருவான கதை என்பதோடு இந்த படத்தில் அவரது கேரக்டரை இன்னும் வித்தியாசப்படுத்தி காண்பித்துளளாராம் முத்தையா. அதோடு, ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமைய்யா போன்றவர்களையும் மதுரைக்காரர்களாகவே மாற்றி விட்டுள்ளாராம்.
அவர்களது நடை உடை பாவணைகள் என அனைத்துமே பக்கா மதுரைக்காரர்களாகவே உள்ளதாம். அதோடு மட்டுமின்றி, அந்த படத்தில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடிப்பவர்களை சென்னையில் இருந்து அழைத்து செல்லாமல், மதுரையில் உள்ள மக்களையே நடிக்க வைத்துள்ளாராம். அவர்களும், படத்தின் முக்கிய நடிகர் நடிகைகளும் கலந்து நடித்திருப்பதால், கொம்பன் படம் மதுரை வாசணை வீசுகிறதாம். அதோடு, ஜி.வி.பிரகாசும் சேர்ந்து கொண்டு, கிராமிய இசை மணம் பரப்பியிருப்பதால் இதுவரை மதுரைகதைக்களத்தில் வெளியான படங்களில் இந்த கொம்பன் ரொம்ப புதுசாக இருக்குமாம்.