வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ''எம்.எஸ்.தோனி'' என்ற பெயரில், இந்தியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாகவும், அவர் இஷாந்த் சர்மா ரோலில் நடிக்கப்போவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. இதுப்பற்றி ஜானிடம் கேட்டபோது முற்றிலுமாக மறுத்துள்ளார்.
ஜான் கூறியுள்ளதாவது, நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, யார் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என்றார். மேலும் புத்தாண்டுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை, நான் இப்போது எனது அடுத்த படமான வெல்கம் பேக் படத்தில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.