டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகைகள் ஆலியா பட் மற்றும் ஸ்ரத்தா கபூருடன் நான் போட்டி போடவில்லை என்று கூறியுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட், ஸ்ரத்தா கபூர். இவர்களில் ஆலியாவும், ஸ்ரத்தாவும் தங்களது படங்களில் தாங்களே பாடவும் செய்கின்றனர். உதாரணமாக ஹைவே, ஹம்தி சர்மா கி துல்கனியா, ஏக் வில்லன், ஹைடர் போன்ற படங்களில் ஆலியாவும், ஸ்ரத்தாவும் பாடியுள்ளனர். தற்போது சோனாக்ஷி சின்ஹாவும் பாட தொடங்கியுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் ''தீவர்'' படத்தில் 'லெட்ஸ் செலிபிரேட்...' என்ற பாடலை பாடியிருக்கிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனாக்ஷியிடம், ஆலியா, ஸ்ரத்தா போன்ற நடிகைகள் பாட தொடங்கிவிட்டதால் அவர்களுக்கு போட்டியாக நீங்களும் பாட தொடங்கியிருக்கிறீர்களா என கேட்க? அதனை மறுத்துள்ளார் சோனாக்ஷி. அவர் கூறுகையில், ஆலியாவும், ஸ்ரத்தாவும் அருமையான பாடகர்கள், அவர்களுடன் நான் போட்டி போடவில்லை. எனக்கு பாடுவது பிடிக்கும், ஆனால் எந்த படத்தயாரிப்பாளரும் என்னை பாடச் சொல்லி கேட்கவில்லை. தீவர் படத்தில் பாடியது நல்ல அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.