இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷாரூக்கான் நடிக்கும் புதியபடமான ''ராயீஸ்'' படத்தில் சோனம் கபூர் அல்லது கத்ரீனா கைப் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலாக இப்போது பாகிஸ்தான் நடிகை கமிட்டாகியுள்ளார். பாகிஸ்தான் நடிகையான மகிரா கான், ஹம்சபார் என்ற சீரியலில் பவாத் கான் ஜோடியாக நடித்துள்ளார். இந்த சீரியல் மிகவும் பிரபலமானது. மேலும் இவர் போல் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஹம்சபார் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால், கடந்தமாதம் மும்பை வந்திருந்தார் மகிரா. அப்போது தனக்கு பாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மகிராவின் போட்டோ ஷூட் மற்றும் ஹம்சபார் சீரியலில் அவரது நடிப்பை பார்த்து ராயீஸ் படத்தில் அவரை கமிட் பண்ணிவிட்டனர் ரித்தேஷ் சித்வானியும், பர்கான் அக்தரும். பாலிவுட்டில் தனது முதல் அறிமுகமே ஷாரூக்கான் உடன் என்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் மகிரா.