ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இப்போதெல்லாம் படத்தின் விளம்பரத்திற்கு விதவிதமாக யோசிக்கிறார்கள். ராஜதந்திரம் என்ற படத்தில் 6 முக்கிய கேரக்டர்கள் இருக்கிறது. 6 கேரக்டருக்கும் தனித்தனி டீசர்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஹீரோயின் ரெஜினா தொடர்பான டீசரை நடிகை சமந்தா தனது டீசரில் கடந்த 15ந் தேதி வெளியிட்டுள்ளார். அஜய் பிரசாத் நடித்த கேரக்டடரின் டீசரை நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
டர்புக்கா சிவா நடித்த டீசரை பிரேம்ஜியும், இளவரசு நடித்த டீசரை இயக்குனர் வெங்கட்பிரபுவும், நேற்று (டிச 16) வெளியிட்டுள்ளனர். வில்லனாக நடித்துள்ள பட்டியல் சேகர் டீசரை அவரது மகன் கிருஷ்ணா இன்று (டிச 17) வெளியிட்டுள்ளார்.
படத்தின் கான்செப்டை சொல்லும் டீசரை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 14ந் தேதி தனது டுவிட்டரில் வெளியிட்டார். இவை எல்லாவற்றையும் சேர்த்து விஜய் நாளை (டிச 18) தனது டுவிட்டரில் வெளியிடுகிறார். படத்தில் வீரா ஹீரோவாகவும், ரெஜினா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஏ.ஜி.அமித் இயக்கி உள்ளார்.